16ஆவது சீசன் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 31ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மேத்தியூ ஷார்ட் தடுமாற்றமாக செயல்பட்டு 11 ரன்களில் அவுட்டானலும் மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது அர்ஜுன் டெண்டுல்கரின் துல்லியமான யார்க்கர் பந்தல் அவுட்டாக்கினார்.
அந்த நிலைமையில் அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டிய அதர்வா டைட் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 10 ரன்களிலும் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்கள். அதனால் 83/4 என தடுமாறிய பஞ்சாப்பை அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரண் – ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார்கள். இருப்பினும் மும்பை பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்ததால் யாரை அடிக்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த ஜோடி 16ஆவது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கரை குறி வைத்தனர்.
ஏனெனில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் சிக்ஸர் பறக்க விட்டதால் தடுமாறிய அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்ததாக ஒய்ட் வீசினார். அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் பவுண்டரி அடித்த சாம் கரண் 3ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க 4ஆவது பந்தை எதிர்கொண்ட ஹர்ப்ரீத் சிங் தனது பங்கிற்கு பவுண்டரியையும் 5ஆவது பந்தில் சிக்ஸரையும் பறக்க விட்டார்.