
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த், “இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஒரு அணியாக நாங்கள் எடுத்த சரியான முடிவு என்று நாங்கள் உணர்கிறோம், ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் எங்கள் பேட்டிங்கை ஆதரிக்கிறோம். அதனால் இந்த முறை பந்து வீச்சாளர்களே, அவர்களுக்கு சிறந்த சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் இன்று எங்களுடைய நாளாக அமையவில்லை.