
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆசிய கோப்பை தொடரிலும் சரி, எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் சரி இந்திய அணியின் முக்கிய வீரராக பாண்டியா பார்க்கப்படுகிறார்.
ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை அற்புதமாக வளிநடத்திய அவர் ஒருமுறை கோப்பையை கைப்பற்றவும், ஒருமுறை அந்த அணியை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றுள்ளார். அவரது அட்டகாசமான பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் இந்திய அணிக்கும் பெருமளவில் உதவும் என்பதால் தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
எதிர்வரும் உலகக்கோப்பை தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கிய தொடராக பார்க்கப்பட்டு வரும் வேளையில் ஆசிய கோப்பை தொடரில் இவரது சிறப்பான செயல்பாடு தற்போது இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்த வகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 66 ரனகளுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தருமாறியது.