Advertisement

நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 06, 2024 • 12:24 PM

நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 06, 2024 • 12:24 PM

இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. அதேசமயம் இலங்கை அணியானது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றதுடன், அதில் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Trending

இந்நிலையில் நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பாயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது நவம்பர் 09ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், இஷ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், வில் யங் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் பதும் நிஷங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்க்ஷனா, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வெண்டர்சே உள்ளிட்டோர் ஒருநாள் மற்றும் டி20 என இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளனர். 

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, அசித்த ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்க, முகம்து ஷிராஸ்.

இலங்கை டி20 அணி: சரித் அசலங்கா (கேப்டம்), பதும் நிஷங்க, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க ஃபெர்னாண்டோ, பனுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, நுவான் துஷார, மதீஷா பதிரானா, பினுர ஃபெர்னாண்டோ, அசித ஃபெர்னாண்டோ

நியூசிலாந்து அணி: மிட்செல் சான்ட்னர் (கே), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்

Also Read: Funding To Save Test Cricket

இலங்கை - நியூசிலாந்து தொடர் அட்டவணை

  • முதல் டி20 போட்டி - நவம்பர் 09 - தம்புளா
  • இரண்டாவது டி20 போட்டி - நவமபர் 10 - தம்புளா
  • முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 13 - தம்புளா
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 17 - பல்லகலே
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - நம்பர் 19 - பல்லகலே

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement