SL vs AUS, 4th ODI: சரித் அசலங்கா அதிரடி சதம்; ஆஸிக்கு 259 ரன்கள் இலக்கு!
Sri Lanka vs Australia: இலங்கை - ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 258 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்தனர்.
Trending
நடுவரிசை ஆட்டக்காரர்களான தனஞ்செயா டி செல்வா மற்றும் சரித் அசலன்கா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தனஞ்செயா 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் தொடர்ந்து நிதானமாக ஆடிய அசலன்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தினைப் பதிவு செய்தார். 106 பந்துகளில் 110 ரன்களை எடுத்த இவர் பாட் கம்மின்ஸ் வீசிய 47.4வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 49 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்களைச் சேர்த்தது.
ஆஸ்திரேலியாவின் சார்பில் மேத்திவ் குன்மேன், மிட்செல் மார்ஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மேக்ஸ்வேல் 1 விக்கெட்டை எடுத்தார். மேலும் 3 ரன் அவுட்களை செய்து ஆஸ்திரேலிய வீரர்கள் அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now