
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 58 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், ஸ்மித் 34 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். உஸ்மான் கவாஜா 77 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 21 ரன்களுக்கும், பாட் கம்மின்ஸ் 11 ரன்களுக்கும் என வந்தவேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.