ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை 386 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள்விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 8, உஸ்மான் கவாஜா4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. டேவிட் வார்னர் 9 ரன்னில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுந்ஷாக்னேவை டக் அவுட்டில் வெளியேற்றினார் ஸ்டூவர்ட் பிராடு.
Trending
தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்களில் 16 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடள்யூ ஆனார். 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில்களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மட்டையை சுழற்றினார். 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட், மொயின் அலி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா சதமடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். அவருடன் விளையாடிய அலெக்ஸ் கேரியும் அரைசதம் கடக்க, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அலெக்ஸ் கேரி 60 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 141 ரன்களை விளாசிய உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 38 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now