
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க மறுமப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 66 ரன்களை எடுத்திருந்த டேவிட் வார்னரும் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினர்.