
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த சூழலில், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து ரசிகர்கள் உள்ளனர்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் தரமான பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின், “எங்களிடம் பல நல்ல வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கில் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் எந்த டெம்போவிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர்கள் இருப்பது நன்மை என்று நான் நினைக்கிறேன். இப்போட்டியில் இங்கிலாந்து எப்படி விளையாடப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.