Advertisement

ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 26, 2023 • 21:53 PM
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

தற்போது உலகப் புகழ்பெற்ற டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான இந்தத் தொடரில் தற்பொழுது 4 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன.

இதில் கடைசி போட்டி டிராவில் முடிய, மற்ற மூன்று போட்டிகளில் இரண்டை ஆஸ்திரேலியாவும் ஒன்றை இங்கிலாந்தும் வென்று இருக்கின்றன. இதன் காரணமாக கடைசியாக ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியாவிடமே ஆஷஸ் கோப்பை அளிக்கப்படும். கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெல்லாவிட்டாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.

Trending


இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பிடித்துள்ளனர். 

இங்கிலாந்து அணி: ஜேக் கிரௌலி, பென் டக்கட், மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement