பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்ய வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
ஜானி பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தைக் கொண்டு பயிற்சி செய்வதன் மூலம் மீண்டும் அவரது கீப்பிங் திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்துவிட்டு போட்டியின் முதல் நாளிலேயே டிக்ளேரும் செய்தது.
இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 141 ரன்களும், அலெக்ஸ் கேரி 60 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பின் 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 273 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
Trending
இதன் மூலம் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் கடுமையான போராட்டம், திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி 2 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான இந்த டெஸ்ட் போட்டி தான், கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என அனைவரும் நடப்பு ஆஷஸ் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தைக் கொண்டு பயிற்சி செய்வதன் மூலம் மீண்டும் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இதுகுறிடதது பேசிய அவர், “நான் தனிப்பட்ட முறையில் டென்னிஸ் பந்தைக் கொண்டு நிறைய வேலைகளைச் செய்வேன். டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை அடிப்பது மென்மையாகவும் மெதுவாகவும் இருக்கும், உங்கள் இயக்கத்தில் சிறிது தளர்வு கிடைக்கும். இதில் இயான் ஹீலி சிறப்பாக செயல்பட்டார். உங்கள் அடித்தளத்தை சரியாகப் பெறுங்கள், நீங்கள் டைவ் செய்ய வேண்டியிருந்தால், உங்கள் இயல்பான திறனைப் பின்தொடரவும். மெதுவான, மென்மையான, அதிக மிருதுவான அசைவுகள், குறிப்பாக ஸ்டம்புகளுக்கு மேல் இது உதவியாக இருக்கும்.
முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் கேம் கிரீன் ஸ்டம்பிங் செய்திருந்தால் ஆஸ்திரேலியா 140/5 ரன்களை எடுத்திருக்கும், அது நிச்சயம் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் அந்த பந்தை சரியாக கவணீத்தீர்கள் எனறால், அது சிறிது சுழன்று மேலே எழுந்தது. அதனால் அவர் மிகவும் தாமதமாக செயல்பட்டார். இதுவே நீங்கள் டென்னிஸ் பந்தைக் கொண்டு நீங்கள் பயிற்சி செய்யும் போது அதனை எளிதாக பிடிக்க உங்களுக்கு பயிற்சி கிடைக்கும” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now