பாக்ஸிங் டே டெஸ்ட்: பாட் கம்மிங்ஸ் அசத்தல்; இங்கிலாந்து தடுமாற்றம்!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்டான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.
Trending
மழை காரணமாக டாஸில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஹாசீப் ஹமீத் - ஸாக் கிரௌளி இணை களமிறங்கினர். இதில் ஹமீத் ரன் ஏதுமின்றியும், ஸாக் கிரௌலி 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் 14 ரன்களிலும் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறார்.
இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now