
Ashes, 5th Test: Smith in middle as Australia extend lead to 152 (Stumps, Day 2) (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 5ஆவது டெஸ்ட் போட்டி ஹாபாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.
அலெக்ஸ் கேரி 10 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ஆம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஸ்டார்க் (3), கேப்டன் பேட் கம்மின்ஸ் (2) ஆகியோரை ஷார்ட் பிட்ச் பந்து மூலம் மார்க் வுட் வீழ்த்தினார்.
நிதானமாக ரன் சேர்த்து விளையாடிய கேரியை (24) கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தி அதிரடியாக ரன் குவித்த நாதன் லயானை (31) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார். இதன்மூலம், 75.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.