
Ashes: Australia release Inglis, Swepson, Neser, Mitchell Marsh for BBL (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாபர்ட்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்கிலிஸ், மிக்கேல் நேசர், மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர் பிபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.