
Ashes: Cummins out of Adelaide Test after COVID scare, Smith to lead (Image Source: Google)
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று அடிலெய்டில் 2ஆவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கேப்டன் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை அதிரடியாக எடுத்துள்ளது.