
Ashes: Head's ton help Australia stage comeback (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஹாபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் (0), உஸ்மான் கவாஜா (9), ஸ்டீவ் ஸ்மித் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே - ட்ராவிஸ் ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.