
Ashes: Scott Boland added to Australia squad for Boxing Day Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்கா ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 8ஆம் தேதி முதல் தொடங்கிய இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஆஷஸ் தொடரை தன்வசப்படுத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.