ஐபிஎல் 2022: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆஷிஸ் நெஹ்ரா
ஐபிஎல் வரலாற்றில் தனது அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமைக்கு ஆஷிஸ் நெஹ்ரா சொந்தக்காரராகியுள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசனின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை.
Trending
குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு விர்திமான் சஹா (5) மற்றும் மேத்யூ வேட் (8) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இறுதி வரை பொறுமையாக விளையாடிய சுப்மன் கில் விக்கெட்டை இழக்காமல் 43 பந்துகளில் 45* ரன்களும், ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 32* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கெத்தாக கைப்பற்றியது.
இந்தநிலையில், குஜராத் அணி இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஸ் நெஹ்ரா ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன் ஒரு வெளிநாடுகளை சார்ந்த தலைமை பயிற்சியாளர்களை கொண்ட அணிகளே ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது ஆஷிஸ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக இருக்கும் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த தலைமை பயிற்சியாளர்களில் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த தலைமை பயிற்சியாளர்கள்;
- ஸ்டீபன் பிளமிங் – 4
- மஹிலா ஜெயவர்தனே – 3
- ட்ரேவர் பெய்லீஸ் – 2
- ஆஷிஸ் நெஹ்ரா – 1
- டாம் மூடி – 1
- ரிக்கி பாண்டிங் – 1
- ஜான் விரைட் – 1
- டேரன் லெஹ்மன் – 1
- சேன் வார்னே – 1
Win Big, Make Your Cricket Tales Now