
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுக்கட்டாயமாக டிரேடிங் முறையில் வாங்கியது. குறிப்பாக தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்த பாண்டியாவை குஜராத் அணி ஆரம்பத்திலேயே தக்க வைத்தது.
ஆனால் 5.25 மணிக்கு குஜராத் தக்க வைத்த அவரை இரவு 7.25 மணிக்கு மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் வங்கியில் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் பிரபல திரைப்படமான மணி ஹைஸ்ட் போல ஹர்திக் பாண்டியாவை திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா ஷெப்ஃபர்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிடமிருந்து தரமான டிரேடிங் செய்துள்ளது. சொல்லப்போனால் முதலில் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதே மணி ஹெய்ஸ்ட்டில் நாம் பார்த்தது போல நன்கு திட்டமிடப்பட்டது. ஆனால் ரோமாரியா ஷெப்ஃபார்ட் வாங்கியது காற்று வாங்குவதற்காக சென்ற ஒருவரிடம் சிறிய பிக் பாக்கெட் அடித்தது போல் அமைந்தது. கேரியரின் சரியான தருணத்தில் அவருக்கு மும்பை 50 லட்சம் கொடுப்பதாக நான் கருதுகிறேன்.