Advertisement

ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு  வந்துள்ளனர்.

Advertisement
Ashwin, Pant Among 7 Delhi Capitals Players To Reach Dubai Ahead Of IPL 2021
Ashwin, Pant Among 7 Delhi Capitals Players To Reach Dubai Ahead Of IPL 2021 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 12, 2021 • 01:46 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்றது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 12, 2021 • 01:46 PM

மேலும் நேற்று முந்தினம் தொடங்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர்.

Trending

அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், ரவிச்சந்திரன்  அஸ்வின், ரஹானே, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் ஆகியோர் இன்று துபாய் வந்தடைந்துள்ளனர்.

மேலும் துபாய் வந்திறங்கிய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆறு நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பயோ பபுலில் உள்ள மற்ற அணி வீரர்களுடன் இவர்கள் இணைவார்கள் என டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள், இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயோ பபுலில் உள்ள மற்ற அணி வீரர்களுடன் இணைவதற்கு முன்பு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆறு நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க போகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement