
ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவுற்றவுடன் தமிழகத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 13ஆவது ஓவரை வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த திருச்சி அணியின் பேட்ஸ்மேன் ராஜ்குமார் அடித்த பந்தை பிடித்த கீப்பர் அவுட் கேட்டார். அதற்கு களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். உடனடியாக பேட்ஸ்மேன் நடுவரின் முடிவுக்கு ரிவியூ எடுத்தார். மூன்றாவது நடுவர் சோதித்துப் பார்த்ததில் பந்து பேட்டில் படவில்லை என்று தெரிந்தது அதற்காக நாட் அவுட் என்று அறிவித்துவிட்டார்.
உடனடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருமுறை ரிவியூ எடுத்து அப்போதும் நாட்-அவுட் வந்தது. ஒரே பந்திற்கு பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவரும் ரிவ்யூ எடுத்த சம்பவம் முதல் முறையாக டிஎன்பிஎல் தொடரில் நிகழ்ந்தது. இதற்காக அஸ்வின் பல்வேறு கிண்டல்களையும் சந்தித்து வருகிறார். போட்டி முடிந்த பிறகு எதற்காக ரிவியூ எடுத்தேன்? என்பதையும் அவர் பேசியுள்ளார்.