
Ashwin, Root, Jamieson, Karunaratne nominated for ICC Men's Test Player of the Year 2021 (Image Source: Google)
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே ஆகியோரது பெயர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அனுபவமிக்க சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2021ஆம் ஆண்டில் 8 போட்டிகளில் மட்டும் விளையாடி 52 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் 337 (ஒரு சதம் உள்பட) ரன்களையும் குவித்துள்ளார்.