-mdl.jpg)
Asia Cup 2022: A comprehensive Victory For Afghanistan To Start To The Tournament! (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று துபாயில் நடந்துவரும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை வீரர்கள் முதல் ஓவரிலிருந்தே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா ஆகிய இருவரையும் ஃபரூக்கி வீழ்த்தினார். நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரின் பதும் நிசாங்கா ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பானுகா ராஜபக்சா மட்டும் அதிரடியாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். ஆனால் நன்றாக ஆடிய அவரும் ரன் அவுட்டாகி வெளியேறினார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.