Advertisement

ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!

இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 01, 2022 • 21:24 PM
Asia Cup 2022: Bangladesh finshes off 183/7 on their 20 overs
Asia Cup 2022: Bangladesh finshes off 183/7 on their 20 overs (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் சபீர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் - ஷாகிப் அல் ஹசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

Trending


அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெஹதி ஹசன் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த முஷ்பிக்கூர் ரஹீம் 4 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் - மஹ்முதுல்லா இணையும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பின் அஃபிஃப் ஹொசைன் 39 ரன்களிலும், மஹ்முதுல்லா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டஸ்கின் அஹ்மத் - மொசடெக் ஹொசைன் இணை ஒருசில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் வநிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement