
15ஆவது ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது, இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணி மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியும் இடம் பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் குரூப் ஏ மற்றும் பி பிரிபில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றில் விளையாட உள்ளது. ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனான இந்தியா ஏழு முறையும், இலங்கை ஐந்து முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.