Advertisement

ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - Kaptain 11 போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

கிரிக்கெட்ன்மோர் (Cricketnmore.com) Kaptain 11 உடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கான போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவனை வழங்குகிறது.  

Advertisement
Kaptain 11 Fantasy Tips
Kaptain 11 Fantasy Tips (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 26, 2022 • 03:59 PM

ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 26, 2022 • 03:59 PM

இந்நிலையில் கிரிக்கெட்ன்மோர் (Cricketnmore.com) Kaptain 11 உடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கான போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவனை வழங்குகிறது. Make Your Fantasy 11 here

Trending

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  •     இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
  •     நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Kaptain 11 போட்டி முன்னோட்டம்

இந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் சூர்யகுமார் யாதவும் அணியில் இருப்பது இந்திய அணிக்கு பெரும் பலமாக காருதப்படுகிறது. 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை வழிநடத்தவுள்ளார். மேலும் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற டி20 பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லாதது பின்னடவை ஏற்படுத்தினாலு, அர்ஷ்தீப் சிங், ஆவாஷ் கான் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்துவீசி வருவது அணிக்கு வலுசேர்க்கிறது. 

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் கேப்டன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரையே பேட்டிங் அதிகம் சார்ந்திருக்கிறது. அவர்களுடன் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஃபகர் ஸமானும் இருப்பதால் இந்த மூவரின் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

அதேசமயம் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஹாரிஸ் ராவூஃப், ஷதாப் கானும் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடிக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 9
  •     இந்தியா - 6
  •     பாகிஸ்தான் - 2
  •     முடிவில்லை - 1

உத்தேச அணி

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல்/ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி, முகமது ஹஸ்னைன்.

Kaptain 11 ஃபேண்டஸி டிப்ஸ்

  •          விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த்
  •          பேட்டர்ஸ் - பாபர் ஆசம், சூர்யகுமார் யாதவ், ஃபகார் ஸமான்
  •          ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான்
  •          பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹரிஸ் ரவுஃப்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement