
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான ஆட்டமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் பாபர் படையும், ரோஹித் சர்மா படையும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் 12 முறை மோதி பாகிஸ்தான் தோற்றது.
ஆனால், கடந்த முறை தான் முதல் முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை டி20 போட்டியில் வீழ்த்தியது. அதன் பிறகு 10 மாதத்திற்கு பிறகு இரு அணிகளும் இப்போது தான் சந்திக்கின்றன.
துபாய் ஆடுகளத்தை பொறுத்த வரை, டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. கடைசியாக விளையாடிய 11 போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் பெரும் முக்கியத்துவத்தை பெறும். நேற்றைய ஆட்டத்தில் கூட ஆஃப்கானிஸ்தான் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது குறிப்பிடத்தக்கது.