ஆசிய கோப்பை 2022: ரிஸ்வான், குஷ்டில் அபாரம்; ஹாங்காங்கிற்கு 194 டார்கெட்!
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் 6ஆவது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்ஹாங் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணியால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹாங்ஹாங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் 53 ரன்கள் எடுத்த ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய குஷ்டில் ஷா கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்கவிட்டு ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 78 ரன்களுடனும், குஷ்டில் ஷா 35 ரன்களையும் எடுத்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now