பாபர் - விராட்டின் புகைப்படம் குறித்து சாக்லைன் முஷ்டாக் கருத்து!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சந்தித்து பேசிய காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரத் தொடங்கி உள்ளன
இந்த நிலையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் வரும் 28ஆம் தேதி மோத இருக்கும் நிலையில் இந்திய பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Trending
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சந்தித்து பேசியுள்ளார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் சாக்லைன் முஷ்டாக், “அந்த கிரிக்கெட் படம் தான் காதல் படம். துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளின் பதற்றத்தை குறைக்க நிறைய வேலை செய்தது, இது விளையாட்டின் ஸ்பிரிட்டிற்கு நல்ல விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now