
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது லீக போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா இருவரும் தலா 28 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் தொடர்ந்து விராட் கோலி அபாரமாக விளையாடி 60 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அவ்வளவுதான், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பந்த் 14, ஹார்திக் பாண்டியா 0 (2), தீபக் ஹூடா 16 (14) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியல் ஓபனர் முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்களை குவித்து அசத்தினார். பாபர் அசாம் 14, பக்கமர் ஜமான் 15 (15) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.