
16ஆவது சீசன் ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தற்பொழுது ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று அணிகள் ஒரு குழுவிலும், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மற்றும் ஒரு குழுவிலும் இடம் பெற்று இருக்கின்றன.
இதில் ஒரு குழுவில் இருக்கும் மூன்று அணிகள், தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன், ஒரு போட்டியில் மோத வேண்டும். அதாவது முதல் சுற்றில் இரண்டு போட்டிகள் கிடைக்கும். இதில் மூன்று அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும். இதேபோல் இன்னொரு குழுவில் இருந்தும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும்.
இந்த நான்கு அணிகளையும் கொண்டு, இரண்டாவது சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வைத்து, அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டு, சாம்பியன் அணி கண்டறியப்படும். இந்த நிலையில் இந்தியா இடம்பெற்றுள்ள குழுவில் பாகிஸ்தான் நேபால் அணிகள் மோதிய போட்டியில், பாகிஸ்தான அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றும், இரண்டாவது மற்றும் கடைசிப்போட்டி இந்திய அணி உடன் டிரா ஆக, புள்ளிப் பட்டியலில் தற்பொழுது முதல் இடத்தில் இருக்கிறது.