
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஏ பிரிவில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி எஞ்சியிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும் என்பது தெரிந்ததே.
ஆனால் பி பிரிவில் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இந்த 2 அணிகளுமே ஆஃப்கானிஸ்தானிடம் தோற்றதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறமுடியும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.