
ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்றின் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில்,“நாங்கள் வேறு சில அணிகளுக்கு எதிராக விளையாடுவது போல் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கடி விளையாடுவதில்லை. அவர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.