
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆசிய ஸ்டார்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியன் ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. இதில் நமன் ஓஜா 5 ரன்னிலும், ராகுல் யாதவ் 4 ரன்னிலும் என ஆட்டமிழக்க, கேப்டன் ஃபசல் 11 ரன்களுக்கும், நகர் 16 ரன்களிலும், மனன் சர்மா 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய சஞ்சய் சிங் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்துடன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தா சஞ்சய் சிங் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர்.