
Assam Government announces HALF Day Holiday for India vs SriLanka 1st ODI (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்திலுள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
இதையடுத்து கௌகாத்தி நகர் அமைந்துள்ள கம்ருப் மாவட்டத்துக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது அஸாம் அரசு. இதன்மூலம் அரசு அலுவலங்களும் கல்வி நிறுவனங்களும் மதியம் 1 மணிக்குப் பிறகு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.