
Aswin congratulates CM MK Stalin (Image Source: Google)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்கள் 33 பேரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளும் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.