
AU-W vs NZ-W Match 10 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AU-W vs NZ-W Match 10: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
- நேரம் - அக்.08 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
AU-W vs NZ-W Match 10: Ground Pitch Report
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 52 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 முறையும், சேஸிங் செய்த அணி 21 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
AU-W vs NZ-W Match 10: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 51
- ஆஸ்திரேலிய மகளிர் அணி - 29
- நியூசிலாந்து மகளிர் அணி - 21
- முடிவில்லை - 01