
AUS V SA, 3rd Test: Setback For Proteas As Theunis De Bruyn Returns Home For Family Reasons (Image Source: Google)
ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது, கடைசி டெஸ்ட் வரும் ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் துவங்குகிறது.
சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க சார்பில் விளையாடிய தியூனிஸ் டி புருய்ன் தனது மனைவின் குழந்தை பிறப்பின் காரணமாக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் பேட்டிங் வரிசையில் 3ஆவது இடத்தில் களமிறங்கிய இவர், 12, 28 ரன் எடுத்து ஏமாற்றினார்.
சிட்னி டெஸ்டில், டி புருய்னுக்கு பதிலாக வான் டெர் டுசென் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் தேர்வு செய்யப்படலாம்.