Advertisement

AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.

Advertisement
AUS V WI, 1st Test: Labuschagne's Blistering Ton Puts Aussies Into A Good Position Against West Indi
AUS V WI, 1st Test: Labuschagne's Blistering Ton Puts Aussies Into A Good Position Against West Indi (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 30, 2022 • 05:09 PM

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று உலகின் அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 30, 2022 • 05:09 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

Trending

இதையடுத்து ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுசாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை தடுத்தனர். தொடர்ந்து பொறுப்பாக விளையாடிய இருவரும் 50 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் கடந்துள்ளனர். இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 36 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரும் அடுத்தடுத்து அரைசதங்களை கடந்ததுடன், 100 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் அமைத்தனர். அதன்பின் 65 ரன்கள் சேர்த்திருந்த உஸ்மான் கவாஜா, கைல் மேயர்ஸ் பந்துவீச்சில் ஜோஷூவா டா சில்வாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.

ஆனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 37ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்னஸ் லபுசாக்னே 150 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.

இதில் மார்னஸ் லபுசாக்னே 154 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement