
Australia vs India 4th Test Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ள்து.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 26) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்வதற்கும் அதிக வாய்ப்பை பெரும் என்பதலும் ரசிகர்கள் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
AUS vs IND 4th Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
- இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
- நேரம் - டிசம்பர் 26, அதிகாலை 5.00 மணி (இந்திய நேரப்படி)