
Australia vs India 5th Test Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 03) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்த்து பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.
அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அனால் இப்போட்டியில் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும். இதுதவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.