
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டின் செய்ய அழைத்துள்ளது.
இதில் பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரர் காம்ரன் குலாமிற்கு லெவனில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியைப் பெறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்று கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 12 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய பாபர் ஆசாம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.