
Australia vs Pakistan 1st ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியானது பல்வேறு குழுப்பங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள முகமது ரிஸ்வான் தலைமையில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs PAK 1st ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
- இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
- நேரம் - நவம்பர் 04, காலை 9 மணி (இந்திய நேரப்படி)