ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 (நாளை) ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபர் ஆசாம் கேப்டனாக பாகிஸ்தானை வழிநடத்தி வந்த நிலையில், தற்போது அணியை ஷான் மசூத் வழிநடத்தவுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
- இடம் - பெர்த் மைதானம், பெர்த்
- நேரம் - காலை 7.50 மணி (இந்திய நேரப்படி)
நேரலை
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாகக் கிடைக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 69
- ஆஸ்திரேலியா - 34
- பாகிஸ்தான் - 15
- முடிவில்லை - 20
பிட்ச் ரிப்போர்ட்
பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானமாகும். இதனால் இங்கு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால் பேட்டர்களுக்கு மிகப்பெரும் சவால்கள் இருக்கும். இருப்பினும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சில நன்மைகள் இருப்பதால் டாஸ் வெல்லும் அணிகள் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளேயிங் லெவன்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கே), பாபர் ஆசாம், சவுத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது, சல்மான் அலி ஆகா, ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: சர்பராஸ் அகமது
- பேட்ஸ்மேன்கள்: ஷான் மசூத், பாபர் ஆசாம் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித்
- ஆல்ரவுண்டர்: டிராவிஸ் ஹெட் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஃபஹீம் அஷ்ரப்
- பந்துவீச்சாளர்கள்: மிட்செல் ஸ்டார்க், ஷாஹீன் அஃப்ரிடி.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now