
Australia vs Pakistan 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் அடைந்த வெற்றியின் உத்வேகத்துடன, பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் தொல்வியுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதுதாவிர்த்து இரு அணிகளும் அதிரடியான வீரர்களும், உலகத்தர வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AUS vs PAK 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
- இடம் - அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானம், அடிலெய்ட்
- நேரம் - நவம்பர் 08, காலை 9 மணி (இந்திய நேரப்படி)