Advertisement

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது.

Advertisement
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 25, 2023 • 02:37 PM

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 25, 2023 • 02:37 PM

இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
  •     இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
  •     நேரம் - அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாகக் கிடைக்கும்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 70
  •     ஆஸ்திரேலியா - 35
  •     பாகிஸ்தான் - 15
  •     முடிவில்லை - 20

பிட்ச் ரிப்போர்ட்

போட்டி நடைபெறும் மெல்பேர்ன் மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக அமையும். குறிப்பாக தற்போது பிட்ச்-ல் ஓரளவிற்கு புற்களும் இருப்பதால் பந்தில் அதிவேகமாக ஸ்விங்கை எதிர்பார்க்கலாம். எனவே ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாட வேண்டும். மேலும் இப்போட்டியில் பேட்டர்கள் நின்று விளையாடினால் நிச்சயம் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும்.

பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அப்ரிடி , ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால் மற்றும் சஜித் கான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான்
  •     பேட்ஸ்மேன்கள்: ஷான் மசூத், பாபர் ஆசாம் (துணை கேப்டன்), டேவிட் வார்னர்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித்
  •     ஆல்ரவுண்டர்: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்
  •     பந்துவீச்சாளர்கள்: மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement