
Australia vs Pakistan 3rd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை (நவம்பர் 10) பெர்த் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடர் காரணமாக அணியின் முன்னணி வீரர்கள் பலரும் இப்போட்டியில் ஓய்வில் இருப்பார்கள் என்பதால் அது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AUS vs PAK 3rd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
- இடம் - பெர்த் கிரிக்கெட் மைதானம், பெர்த்
- நேரம் - நவம்பர் 10, காலை 9 மணி (இந்திய நேரப்படி)