
AUS vs SA, 2nd T20I: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்றுடார்வினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 14 ரன்னிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 18 ரன்னிலும், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த டெவால்ட் பிரீவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடி வந்த டெவால்ட் பிரீவிஸ் 41 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுபக்கம் ஸ்டப்ஸ் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.