AUS vs SA, 3rd Test: கவாஜா, லபுசாக்னே அரைசதம்; முன்கூட்டியே முடிந்த முதல்நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 147 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
Trending
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இணை களமிறங்கியனர். இதில் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுசாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஆஸ்திரேலிய அணி 147 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமில்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல்நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதில் உஸ்மான் கவாஜா 54 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now