AUS vs SA: மூன்றாவது டெஸ்டிலிருந்து கேமரூன் க்ரீன் விலகல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
மெல்பர்னில் நடைபெற்று வரும் பக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 575 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இதில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விலையாடிய வார்னர் இரட்டை சதமடித்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரியும் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்ய, ஸ்டீவ் ஸ்மித், கேம்ரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அரைசதம் கடந்து அணிக்கு பங்களிப்பு செய்தனர்.
Trending
அதிலுலும் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 254 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார் டேவிட் வார்னர். இதற்கு முன்னர் இந்த சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் நிகழ்த்தி இருந்தார். 200 ரன்கள் விளாசிய நிலையில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் டேவிட் வார்னர் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் 6 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நோர்ட்ஜ் வீசிய பந்தில் வலது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்து வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now